புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (11:51 IST)

சூரரை போற்று ரிலீஸ் தேதி மாற்றம் - அஜித் பிறந்தநாளில் ரிலீஸா?

சூர்யா நடித்து வெளியாகவிருக்கும் ‘சூரரை போற்று’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்த நிலையில் தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’. விமானி ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக நடுவானில் விமானத்தில் நடத்தப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள சூரரை போற்று ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. ஏப்ரலுக்கு பதிலாக மே 1ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மே 1 உழைப்பாளிகள் தினம் கொண்டாடப்படுவதால் அந்த நாளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நடிகர் அஜித் பிறந்த நாளும் அதே நாளில்தான் வருகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.