செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2020 (16:02 IST)

விரதம் முடித்த கையோடு பகாசுரன் போல் வெளுத்து கட்டிய சிம்பு - வைரல் புகைப்படம்!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் ஹேண்ட்ஸம் ஹீரோவாக வலம் வந்து இளம் பெண் ரசிகர்கள் மத்தியில் வசீகரித்தவர் நடிகர் சிம்பு.   குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் வல்லவன் , மன்மதன், கோவில், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்தார். 
 
அதையடுத்து வந்தா ராஜாவா தான் வருவேன் , செக்கச்சிவந்த வானம் ,  அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் நடித்து உச்ச நடிகர்களுக்கு இணையாக தனது வெற்றியை சமன் செய்து வந்தார். இதற்கிடையில் வெங்கட்பிரபு இயக்கத்தில்  ‘மாநாடு’ என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால், சிம்பு படிப்பிப்பிற்கு சரியாக செல்லாமல் பொறுப்பின்றி இருந்து வந்ததால் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது
 
பின்னர் சிம்புவின் தயார் கோர்த்த உறுதியின்படி ‘மாநாடு’ படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். இதற்கிடையில் உடல் எடை கூடி குண்டாக இருந்த சிம்பு கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானதால் உடல் எடையை குறைப்பதில் மும்முரமாக இருந்து வந்தார். இதன் ஒரு பகுதியாக ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு விரதம் இருக்க துவங்கினார். தற்போது விரதம் முடிந்த நிலையில் சிம்பு வெறித்தனமாக பிரியாணி சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.