‘கட்’ சொன்ன பிறகும் நடிகையின் உதட்டைக் கடித்த ஹீரோ
இயக்குநர் ‘கட்’ சொன்ன பிறகும் கூட நடிகையின் உதட்டில் இருந்து தன் உதட்டை எடுக்காமல் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார் ஹீரோ.
ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ள பாலிவுட் படம் ‘எ ஜென்டில்மேன் : சுந்தர், சுசீல், ரிஸ்கி’. இந்தப் படத்தில், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். நாளை இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் இடம்பெறும் ‘லாகி நா ஜூட்டி’ பாடலுக்காக, முத்தக்காட்சி ஒன்றைப் படமாக்கியிருக்கிறார்கள். படத்துக்கான ஸ்கிரிப்ட்டை எழுதும்போது சிறிய முத்தக்காட்சியாக இருந்தால் போதும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் இயக்குநர்கள். ஆனால், ஷூட்டிங்கின்போது இயக்குநர்கள் ‘கட்’ சொன்னபிறகும், சித்தார்த்தும், ஜாக்குலினும் உதட்டைப் பிரிக்காமல் நீண்ட நேரம் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கின்றனர். இயக்குநர்களும் இதுதான் சான்ஸ் என்று நீண்ட முத்தக்காட்சியையே படத்தில் வைத்துவிட்டார்களாம்.