திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:48 IST)

நீ ஒரு லெஜண்ட் மச்சி… அஸ்வினைப் பாராட்டிய தமிழ் நடிகர்!

சிட்னி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து டிரா செய்த அஸ்வினை நடிகர் சித்தார்த் பாராட்டியுள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் சிறப்பான பேட்டிங்கால் தோல்வியை தவிர்த்து டிரா ஆனது. நான்காவது இன்னிங்ஸில் பண்ட், புஜாரா, விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோரின் நிதானமான ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் பந்துவீச்சில் ஜொலிக்காத அஸ்வின் பேட்டிங்கில் 100 பந்துகளுக்கு மேல் சந்தித்து விக்கெட்டை பறிகொடுக்காமல் சிறப்பாக விளையாடினார். அவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழ் சினிமா நடிகரும் அஸ்வினின் நண்பருமான சித்தார்த் ‘நீ ஒரு லெஜண்ட் அஸ்வின். என்ன ஒரு சிறப்பான ஆட்டம். என்னை பொருத்தவரை நீ தான் ஆட்டநாயகன். லெஜண்ட் மச்சி நீ” என புகழாரம் சூட்டியுள்ளார்.