1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (09:49 IST)

குக் வித் கோமாளி பிரபலம் சினிமாவுக்கு வர சிவகார்த்திகேயன் சொன்ன ஐடியா!

குக் வித் கோமாளியில் பங்கேற்று வரும் அஸ்வின் தான் சினிமாவுக்கு வரக் காரணமாக இருந்தது சிவகார்த்திகேயன்தான் எனக் கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

குக் வித் கோமாளியில் நேற்றைய எபிசோட் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக நடந்தது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரையும் பாராட்டி பேசினார். அப்போது நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அஸ்வினிடம் ‘இன்ஸ்டாகிராம் சென்றால் பெண்கள் எல்லாம் உங்கள் புகைப்படத்தைதான் வைத்து இருக்கிறார்கள்.’ எனக் கூறினார்.

அப்போது அஸ்வின் ‘நான் கோயம்புத்தூரில் இருந்து சினிமாவுக்குள் நுழைய வேண்டும்  என ஒருவரை நம்பி வந்து ஏமாந்த போது சிவகார்த்திகேயனிடம் சென்று புலம்பினேன். அப்போது நீங்கள்தான் சமூகவலைதளங்களில் இயக்குனர்கள் ஆடிஷனுக்கு அழைப்பார்கள். அதை பாலோ செய்யுங்கள் என்று கூறினார். அந்த அறிவுரைதான் என்னை இப்போது இந்த இடத்தில் கொண்டு வந்து வைத்துள்ளது.’ எனக் கூறியுள்ளார்.