1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (18:37 IST)

’விக்ரம்’ படத்தின் இடைவேளையில் டிரைலர்: வாரிசு நடிகருக்கு அடித்த யோகம்!

vikram
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் இடைவேளையின் போது நடிகர் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் நடித்த மாயோன் என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
 
 சிபிராஜ் தன்யா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை கிஷோர் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் ஒரு திரில் கதையம்சம் கொண்ட படம் என்ற நிலையில் இந்த படத்திற்கு நாளை நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது