வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (18:22 IST)

முதல்முறையாக அதிகாலை 4 மணி காட்சி பார்க்கும் கமல்ஹாசன்!

vikram
உலக நாயகன் கமல்ஹாசன் முதல் முறையாக அதிகாலை 4 மணி காட்சியை பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
 
 இந்த படம் நாளை மறுநாள் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை அதிகாலை 4 மணி காட்சியை சென்னை ரோகினி திரையரங்கில் கமல்ஹாசன் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
ரசிகர்களோடு ரசிகர்களாக முதல் முறையாக கமல்ஹாசன் படம் பார்க்க இருப்பதை  அடுத்து இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது 
 
ரஜினி அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் இதுவரை திரையரங்குக்கு வந்து முதல் காட்சியை பார்க்காத நிலையில் நடிகர் கமல்ஹாசன் முதல் முதலாக வந்து பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது