செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (06:21 IST)

ஸ்ருதி ஹாசனின் மேக்கப் போடாத மூஞ்சி... பட்டிப்பார்த்த பிறகுதான் அடையாளம் தெரியுது!

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சர்ச்சைகளில் இருந்தும் கிசுகிசுக்களில் இருந்தும் தப்பவில்லை. தனது புதிய காதலருடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் அண்மையில் வைரலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித் அவுட் மேக்கப் முதல் ஃபுல் மேக்கப் வரை வீடியோ வெளியிட்டுள்ளார். ஆத்தாடி ஸ்ருதி ஹாசன் மேக்கப் போடலன்னா இப்படி தான் இருப்பாங்களா? ரைட்டு பட்டி டிங்கரிங் பார்த்த பிறகு தான் இது ஸ்ருதி ஹாசன் என்பதையே நம்பமுடியுது.