1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2023 (15:20 IST)

மீண்டும் இசையமைப்புப் பணிகளில் இறங்கும் ஸ்ருதிஹாசன்…!

அமெரிக்காவில் இசைத்துறையில் படித்து இந்தியா திரும்பிய ஸ்ருதிஹாசன் யாரும் எதிர்பாராத விதமாக நடிப்பில் கால்பதித்தா. ஆனாலும் சில இசை ஆல்பங்களில் பாடுவது, சினிமா பாடல்களில் பாடுவது என இசையிலும் கவனம் செலுத்தினார்.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்க உள்ளதாகவும், அதில் தன் தந்தை கமல்ஹாசனின் பங்களிப்பு இருக்கும் எனவும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.