விஜய்யின் ஓப்பனிங் பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் இவர்தான்...
‘விஜய் 62’ படத்தில் ஓப்பனிங் பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் யார் எனத் தெரியவந்துள்ளது. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு ஈசிஆரில் தொடங்கியது.
கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சந்தானம் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றுகிறார். தேசிய விருதுபெற்ற ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடன அசைவுகளை சொல்லித்தர இருக்கிறார். விஜய் என்றாலே அவருடைய டான்ஸ் எப்போதுமே பேசப்படும். இந்தப் பாடலின் டான்ஸும் பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள்.