3 வயதில் விட்டு சென்ற தந்தை... புகைப்படத்தை வெளியிட்டு மனம் வருந்திய ஷெரின்!
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டில் இருக்கும் நேரத்தில் ஷெரின் தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டு பல நியாபகங்ளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் ஊட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கினார்.
இந்நிலையில் தற்போது தனது தந்தை மற்றும் தாயுடன் சிறு வயதில் எடுத்த புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் " நாங்கள் ஒன்றாக இருக்கும் ஒரே படம்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஷெரின் மூன்று வயது இருக்கும் போதே அவரது அப்பா இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.