1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 ஏப்ரல் 2020 (10:13 IST)

ஒருத்தரையும் விட்டு வைக்காத கொரோனா... புது பிஸினஸில் இறங்கிய மணிமேகலை - வைரல் வீடியோ!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.     இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் மணிமேகலை ஊரடங்கு உத்தரவு அறிவித்தபோது கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டார். அங்கிருந்தபடியே அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார். தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராமத்தில் முறுக்கு சூடும் வீடியோவை வெளியிட்டு பலரது கவனத்தை திசை திரும்பியுள்ளார். "இந்த கிராமத்துல நெறைய சொல்லி குடுக்குறாங்கப்பா... கைவசம் ஒரு பிசினஸ் இருக்கு.. இந்த கொரோனா ஊரடங்கு டைம் நல்லா போகுது. இருந்தாலும் நான் சென்னையை ரோ ரொம்ப மிஸ் பண்றேன்" எனக்கூறியுள்ளார்.