மதுரையில் பிரம்மாண்டமாக நடக்கும் விருமன் இசை வெளியீடு… கலந்துகொள்ளும் பிரபலங்கள்
விருமன் படத்தின் இசை வெளியீடு நாளை மதுரையில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஆகஸ்ட் 12 ஆம் தேதி விருமன் திரைப்படம் ரிலீஸை முன்தள்ளியுள்ளது.
படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற கஞ்சா பூவு கண்ணால பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் ஆனது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நாளை நடக்க உள்ளது.
இந்நிலையில் இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா கலந்துகொள்ள உள்ளார். மேலும் தனது மகள் அதிதி ஷங்கருக்காக இயக்குனர் ஷங்கரும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.