திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (23:48 IST)

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கவரும் ஷாலினி அஜித் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித். இவருக்கும் நடிகை ஷாலினிக்கும் அமர்க்களம் படத்தில் காதல் துளிர்க்கவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு ஷாலினி அஜித் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் பேட்மிண்டனில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு ஷாலினி அஜித் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

ஷாலினி ஏற்கனவே காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே , பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவகள் வெளியாகிறது. மிகச்சிறந்த நடிகை எனப் பெயர் பெற்ற ஷாலினி அஜித் மீண்டும் நடிப்பதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.