வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (16:19 IST)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலியல் சீண்டல்; கொச்சைத்தனமான கம்மெண்டுகள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலியல் சீண்டல்; கொச்சைத்தனமான கம்மெண்டுகள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி நமது கலாச்சாரத்துக்கு எதிரானது அதனை தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கு வலு சேர்க்கும் விதமாக பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சக போட்டியாளர்கள் மீது நாராசமான கம்மெண்டுகள் அடிக்கின்றனர்.


 
 
முன்னர் நமீதா அணிந்து இருந்த ஆடை குறித்து ஆபாசமாக அவருக்கு பின்னால் பேசிய பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிகர் பரணி மீது பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என பழி சுமத்தினார்கள். இந்நிலையில் மீண்டும் தங்கள் பாலியல் சீண்டல் கலந்த கொச்சைத்தனமான வார்த்தைகளை பேச ஆரம்பித்துள்ளனர்.
 
நேற்று வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிற்கு புதிய வரவாக நடிகை சுஜா வருணி களம் இறக்கப்பட்டார். அவர் வந்ததும் அவரை வரவேற்று அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசி தங்களுடன் சகஜமாக பழகுமாறு செய்ய வேண்டும் சக போட்டியாளர்கள். ஆனால் பிந்து மாதவியையும் கணேஷையும் தவிர மற்றவர்கள் ஒதுங்கியிருந்து கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.
 
கணேஷ் சுஜா வருணிக்கு உதவி செய்ததை ஆண்கள் அறையில் இருந்தவர்கள் மோசமாக கொச்சைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக வையாபுரியின் கமெண்டுகள் மிகவும் கீழ்த்தரமாக இருந்தது.
 
போர்ட்டர் வேலை செய்யுறான், கட்டிப்பிடி கட்டிப்பிடிடா, கணேஷ் உங்க பெட் இங்க இருக்கு, செருப்பைக் கூட தூக்கிடுவான் போல என கொச்சையாக பாலியல் சீண்டல் கம்மெண்டுகளாக பேசினர். கணேஷ் உள்ளே வந்த பின்னரும் அவரை வைத்துக்கொண்டு தங்களின் கிண்டலை தொடர்ந்தனர். ஆனால் கணேஷ் எந்த பதில் ரியாக்‌ஷனும் செய்யாமல் இருந்தார்.