ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (23:13 IST)

பிரபாஸின் தீவிர ரசிகர் தற்கொலை ....

நடிகர் பிரபாஸின் தீவிர ரசிகர் ஒருவர் ராதே ஷ்யாம் பட தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகிறது.

நடிகர் பிரபாஸ்- பூஜா ஹெக்டே  நடிப்பில்   இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவான படம் ராதே      ஷ்யாம். இப்படம் சமீபத்தில்  தியேட்டர்களில் வெளியானது. சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.  இந்நிலையில், மிகுந்த மன உளைச்சல் ஆளான பிரபாஸின் ரசிகர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.