செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:50 IST)

பீஸ்ட் படத்தில் செல்வராகவன் சம்பளம்… இரண்டாவது படத்திலேயே இவ்வளவா?

பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டு உள்ளன. அதை முன்னிட்டு இப்போது படத்தில் மூன்று வில்லன்களாக செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ மற்றும் டான்ஸிங் ரோஸ் புகழ் ஷபீர் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் செல்வராகவனுக்கு இந்த படத்தில் 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். சாணிக்காயிதம் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கு இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்திருப்பது ஆச்சர்யத்தையே ஏற்படுத்தியுள்ளது.