செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 13 ஜூலை 2022 (22:21 IST)

தனுஷ் பட அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்  நானே வருவேன் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட செல்வராகவன்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் நானே வருவேன்.  இப்படத்தை அவரது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கி வருகிறார்.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இப்பட்த்தின் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், இவர்கள் மூவரும் இணையும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் தயார் நிலையில்  இருப்பதாகவும், இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி  ரிலீஸாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவவித்துள்ளார். இப்படத்தில் அவர் டப்பிங் பேசுவதுபோல் புகைப்படம் உள்ளதால் அவரும் இப்படத்தில் நடித்துள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.