புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 1 ஜனவரி 2023 (15:27 IST)

வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்: இளைஞர்களுக்கு செல்வராகவன் அறிவுரை!

selvaragavan
ஜாலியாக இருந்து மீதி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் என இளைஞர்களுக்கு இயக்குனர் செல்வராகவன் அறிவுரை தெரிவித்துள்ளார்
 
இயக்குநர் செல்வராகவன் கடந்த சில நாட்களாக தினந்தோறும் தத்துவ மழை பொழிந்து வரும் நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து, வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு "கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல"
 
அவரது இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மோகன் ஜி இயக்கத்தில் பகாசுரன் என்ற திரைப்படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva