1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 6 மார்ச் 2017 (19:51 IST)

சீமான் இயக்கத்தில் விஜய் ஆண்டனி...?

சீமான் மீண்டும் சினிமாவில் பிஸியாகிறார். சுரேஷ் காமாட்சி இயக்கும் மிக மிக அவசரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர், ஒரு படத்தை இயக்கவும் செய்கிறார்.


 


 
கடந்த ஆறேழு வருடங்களாக கோபம், பகலவன் என்று இரண்டு கதைகள் இருப்பதாக சீமான் கூறி வருகிறார். அதில் பகலவன் படத்தை விஜய் நடிப்பில் தாணு தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.
 
பிறகு ஜீவா, விஷால் என்று பல நடிகர்களை சீமான் முயற்சி செய்தார். எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், விஜய் ஆண்டனியை வைத்து பகலவன் படத்தை இயக்க அவர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
 
ஒவ்வொரு படத்தையும் அலசி ஆராய்ந்து ஒப்புக் கொள்ளும் விஜய் ஆண்டனி, சீமானிடம் மாட்டுவாரா...? பொறுத்திருந்து பார்ப்போம்.