புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (09:57 IST)

வெப் சீரிஸாக உருவாகிறதா சார்பட்டா பரம்பரை? திரைக்கதை எழுதும் 3 எழுத்தாளர்கள்!

சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. 1970ளில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சன அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அப்போதைய எமெர்ஜென்சி கால சூழல் போன்றவற்றை பதிவு செய்திருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் துணை கதாப்பாத்திரமாக வந்த டான்சிங் ரோஸ் கதாப்பாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. எதிரணி பாக்ஸராக வரும் டான்சிங் ரோஸ் ஆடியபடி சண்டைபோடும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் டான்ஸிங் ரோஸ், டாடி, ரங்கன் வாத்தியார், வேம்புலி ஆகிய எல்லா கதாபாத்திரங்களும் தனித்தனியாக ஒரு படம் எடுக்கும் அளவுக்கு வலுவான கதாபாத்திரங்களாக அமைந்துள்ளதாக பாராட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் எல்லா கதாபாத்திரங்களையும் விரிவாக்கி சார்பட்டா பரம்பரையை வெப் சீரிசாக எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக வடசென்னையை சேர்ந்த எழுத்தாளர்களான தமிழ் ப்ரபா, பாகியம் சங்கர் மற்றும் கரண் கார்க்கி ஆகியோர் திரைக்கதை எழுத உள்ளதாக சொல்லப்படுகிறது.