செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஜூலை 2021 (10:42 IST)

சூர்யா பிறந்தநாளில் அன்னதானம், ரத்ததானம்! – ரசிகர்களுக்கு சூர்யா நன்றி!

நேற்று நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்ட ரசிகர்களை நடிகர் சூர்யா பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து சமூக வலைதளங்களில் கொண்டாடினர். மேலும் பல மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் கோவில்கள், பொது இடங்களில் அன்னதானம் வழங்குதல், ரத்ததான முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பொதுசேவை மூலமாக சூர்யா பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் அவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா தனது பிறந்தநாளில் மக்கள் சேவை செய்த ரசிகர்களை பாராட்டியதுடன் நன்றியும் தெரிவித்துள்ளார்.