திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (16:14 IST)

’சார்பாட்டா பரம்பரை’ படத்தின் ‘வம்புல தும்புல’ வீடியோ பாடல் ரிலீஸ்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’சார்பாட்டா பரம்பரை. இந்த படத்தின் படப்பிடிப்பு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தியேட்டரில் ரிலீஸ் செய்ய காத்து இருந்தது. ஆனால் தற்போது இந்த படம் அமேசான் ஓடிடியில் நாளை ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் வீடியோ பாடல் ஒன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் வெளியிட்டுள்ளார் 
 
வம்புல தும்புல’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணனனின் கானா பாடல் பாணியில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது 
 
ஏற்கனவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பாடல் காரணமாக மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ்நாராயணன் இசையில் கானா முத்து, இசைவாணி, சந்தோஷ் நாராயணன், கானா தரணி ஆகியோர் பாடிய இந்த பாடலை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.