புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (18:00 IST)

கார்த்தி பாடிய ‘சர்தார்’ பாடல் ’ஏறுமயிலேறி’: சற்றுமுன் ரிலீஸ்!

sardar
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன்  இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சர்தார்’. கார்த்தி வித்தியாசமாக இரண்டு கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார் என்பதும் மேலும் ஒரு முக்கிய கேரக்டர்களில் லைலா மற்றும் ரஜிஷா விஜயன் நடித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏறு மயிலேறு என்ற பாடல் இடம் பெற்ற நிலையில் அந்த பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது 
 
ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை கார்த்தியே பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக திரைப்படம் 
 
வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் ‘சர்தார்’  படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 


Edited by Siva