ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 4 ஜனவரி 2017 (15:45 IST)

சரத்குமார், ராதிகா கூட்டுத் தயாரிப்பில் நடிக்கும் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன், சைத்தான் வெற்றிகளைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் எமன் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில்  சரத்குமார், ராதிகா இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறிய விஜய் ஆண்டனி, "நான் என் தாய் வீட்டுக்கு வந்துள்ள  மனநிலையில் இருக்கிறேன். என் திரைப்பயணத்தை நான் ஒரு இசை அமைப்பாளனாக தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில்  எனக்கு வாய்ப்பளித்தவர் ராதிகா மேடம். அதன் அடிப்படையில்தான் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு படம் செய்து கொடுக்க  ஒப்புக் கொண்டேன்.

பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. வழக்கம் போலவே இந்தப் படத்தின் தலைப்பும்  வித்தியாசமாக இருக்கும்" என்றார். சரத்குமார், ராதிகா தங்களின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஐ பிக்சர்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.