1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (12:58 IST)

யம்மாடியோவ்...பேபி சாராவா இது! ஹீரோயின் ரேஞ்சிற்கு கிடுகிடுன்னு வளர்ந்துட்டாங்களே!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதிலும் நீங்க இடம் பிடித்த பல குழந்தைகளை நாம் பார்த்துள்ளோம். அதிலும் குறிப்பாக தெய்வத்திருமகள் படத்தில் மனநலம் குன்றிய விக்ரமின் செல்ல மகளாக நடித்து புகழ்பெற்றவர் பேபி சாரா. 
 
இவர் குழந்தையாக இருந்த போதே பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து தமிழ் சினிமா இயக்குனர்களின் கவனம் சாரா மீது பட...தங்கள் படங்களில் ஏதேனும் குழந்தை கதாபாத்திரம் என்றாலே அத்தனை இயக்குனர்களும் சாராவை நடிக்கவைக்க முயற்சித்தனர். அந்தவகையில் சித்திரையில் நிலா சோறு , சைவம் , விழித்திரு மற்றும் சம்பத்தில் வெளிவந்த சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
ரசிகர்கள் குழந்தையாக பார்த்து ரசித்து வந்த சாரா தற்போது கிடு கிடுவென வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சிற்கு தோற்றமளிக்கிறார். ஒல்லியான அழகில் கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுக்கும் அவர் ஹீரோயினாக நடிக்க இறங்கினால் ரசிகரக்ளின் பேவரைட் நடிகை சாரா என மாற்றி எழுதிடுவர் என ரசிகரகள் கூறி வருகின்றனர்.