’தளபதி 64’ படத்தின் அடுக்கடுக்கான ஆச்சரியங்கள்
விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது. வெளிநாடு சென்ற விஜய் இன்று நாடு திரும்பி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் குறித்து விவரங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேலும் சில நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவற்றில் ஒருவர் இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்கவிருப்பதாகவும் விஜய் இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய்யின் கேரக்டர் கல்லூரி பேராசிரியராக இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் அவரது கேரக்டர் வேற லெவலில் மாறும் என்றும் கூறப்படுகிறது
மேலும் இந்த படத்திலும் யோகிபாபு, விவேக் ஆகிய இருவரும் நடிக்கவிருப்பதாகவும், விவேக் விஜய்யுடன் பணிபுரியும் கல்லூரி பேராசிரியராகவும், யோகிபாபு சாந்தனுவின் நண்பராக கல்லூரி மாணவராக நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்காக அனிருத் எட்டு பாடல்களை கம்போஸ் செய்யவிருப்பதாகவும் அனைத்து பாடல்களும் சின்னச்சின்னதாக ஆங்காங்கே வரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.