சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம்… யுவன் ஷங்கர் ராஜா இசை!
நடிகர் சந்தானம் சமீபத்தில் நடித்த படங்களில் ஏ1 மற்றும் டிக்கிலோனா ஆகிய படங்களைத் தவிர மற்ற படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்து உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏஜெண்ட் கண்ணாயிரம் என தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.