வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:19 IST)

பாலிவுட்டில் களமிறங்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்!

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்போது பாலிவுட்டிலும் படங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சூர்யாவின் நெருங்கிய நண்பரான ஞானவேல் ராஜா சூர்யா ரசிகர் மன்றத் தலைவராக இருந்து பின்னர் தயாரிப்பாளரானார். அதன் பின்னர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியவர்களை வைத்து படங்கள் தயாரித்த அவர் ஒரு கட்டத்தில் பிற ஹீரோக்கள் படம், விநியோகம் என பல தளங்களில் கால்பதித்தார். அதில் ஒரு சிறு தேக்கம் ஏற்பட்ட நிலையில் இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் இப்போது மீண்டும் முழுவீச்சில் இயங்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் தயாரிப்பில் உருவான மெட்ராஸ் மற்றும் டெடி ஆகிய படங்களை இப்போது இந்தியில் தயாரிக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்போது கேட்டு வரும் கதைகளையும் இந்தி சினிமாவுக்கும் பொருந்துமா என்று பார்த்தே தயாரிக்க முடிவு செய்கிறாராம். இதனால் இனிமேல் இந்தியில் அதிகளவில் படத்தயாரிப்பில் ஈடுபடுவார் என சொல்லப்படுகிறது.