செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 மே 2020 (08:36 IST)

ஜக்கி வாசுதேவை நேர்காணல் செய்த சந்தானம்! இணையத்தில் பரவும் வீடியோ!

கோயம்புத்தூரில் ஈஷா மையத்தை நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ்வை நகைச்சுவை நடிகர் சந்தானம் நேர்காணல் செய்துள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கோயம்புத்தூரை அடுத்துள்ள வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் மிகப்பெரிய ஈஷா மையத்தை உருவாக்கி நடத்தி வருகிறார் ஜக்கி வாசுதேவ். அந்த வளாகம் இருக்கும் இடம் காட்டுப்பாதையை அபகரித்து அமைக்கப்பட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடக்கும் மகாசிவராத்திரி நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரொனா வைரஸ் பரவலுக்கு சற்று முன்னரே நடந்தது. அதனால் அங்கிருந்து பலருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவை நடிகர் சந்தானம் விடியோ கால் மூலமாக நேர்காணல் செய்துள்ளார். அதில் ஈஷா மையத்தின் மீதும் ஜக்கி வாசுதேவ் மேலும் இருக்கும் பல சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சத்குருவும் பதிலளித்துள்ளார்.