சந்தனத்தேவனில் 3 நாயகிகள்...?
அமீர் இயக்கத்தில் ஆர்யாவும், அவரது தம்பி சத்யாவும் இணைந்து நடிக்கும் சந்தனத்தேவனில் 3 நாயகிகள் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, ஜல்லிக்கட்டை மையப்படுத்திய சந்தனத்தேவன் படத்தை எடுக்கவிருப்பதாக அறிவித்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார் அமீர். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று கூறப்படவில்லை.
இந்தப் படத்தில் அதிதி மேனன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது மேலும் இரு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அமீர் என்று தகவல்கள் கூறுகின்றன.