1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 28 மார்ச் 2020 (11:01 IST)

குட்டி பாப்பாவின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ் - வைரல் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக  இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து சமீபத்தில் தான் ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஞ்சு குழந்தையின் கியூட் புகைப்படமொன்றை முதன்முறையாக வெளியிட்டு அனைவரும் வீட்டில் பத்திரமாக இருங்கள் என கூறியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Kutty Papu