சந்தானத்தின் “குலு குலு” ரிலீஸ் தேதி அறிவிப்பு! – விரைவில் டீசர், பாடல்கள்!
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “குலு குலு” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழில் “மேயாத மான்”, “ஆடை” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரத்னக்குமார். தற்போது ரத்னக்குமார் இயக்கத்தில் சந்தானம் நடித்து “குலு குலு” என்ற படம் தயாராகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
காமெடி, ஆக்ஷன் படமான குலு குலு இந்த மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ ஆகியவை வரும் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.