வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (10:03 IST)

ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்!

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நிலையில் இப்போது ஜாமீனில் வெளியாகியுள்ளார்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு கோரப்பட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து இரு தினங்களுக்கு முன் மீண்டும் ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏற்றுக் கொண்டுள்ள மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அவர் கடந்த வாரம் விடுதலை ஆனார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி, சமீர் வான்கடே ஆர்யன் கானை விடுவிக்க 8 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோலவே அவர் விசாரிக்கும் பல வழக்குகளிலும் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இப்போது அந்த வழக்குகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.