வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (07:27 IST)

ராதாரவிக்கு மாத்திரையும் பாப்கார்னும் தருகிறேன்: சமந்தாவின் கிண்டல் டுவீட்

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சமீபத்தில் நடந்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் திரையுலகினர்களும் அரசியல்வாதிகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சமந்தா தனடு டுவிட்டரில் நக்கலான ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.
 
தான் செய்தது சரி என நிரூபிக்க போராடுகிறார் ராதாரவி! உங்களைப் பார்த்தா எனக்கு பாவமாக இருக்குது. உங்கள் ஆன்மா அமைதியைத் தேட விரும்புகிறேன். அதற்காக நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள்’ என சமந்தா தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.
 
நடிகர் சங்கம் உள்பட ஒட்டுமொத்த திரையுலகமும் நயன்தாராவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதால் ஒரு மூத்த நடிகராக இருந்தும் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த பல வருடங்களாக நக்கலாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வரும் ராதாரவி, இனியாவது திருந்துவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்