1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 12 மார்ச் 2025 (18:56 IST)

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

நடிகை சமந்தா விரைவில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏற்கனவே சமந்தா நடித்த இரண்டு படங்களை இயக்கிய பிரபல பெண் இயக்குநர் தான்   இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் குறைவாகவே தோன்றியுள்ளார். உடல்நல கோளாறு காரணமாக, திரைத்துறையில் தனது கவனத்தை குறைத்து, சில   வெப் தொடர்களில் மட்டுமே நடித்து வந்தார்.
 
இந்த சூழலில், சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "ட்ராலாலா மூவிஸ் பிக்சர்ஸ்" மூலம் முதல் முறையாக ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த படத்தில் அவரே கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி, "சமந்தாவின் அடுத்த படத்தை இயக்குவது என் பெருமை" என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமந்தா நடித்த "ஜபர்தஸ்த்" மற்றும் "ஓ பேபி" ஆகிய படங்களை இயக்கிய அவர், மீண்டும் மூன்றாவது முறையாக சமந்தாவுடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

Edited by Siva