செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (07:55 IST)

சமந்தா, வருண் தவான் நடிக்கும் சிட்டாடல் தொடரின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

சமந்தா பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதனை சமந்தா மறுத்து  தான் நடிக்கும் தொடர் ரீமேக் இல்லை என்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் கதாநாயகனாக வருண் தவான் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் ஆக்‌ஷன் மற்றும் கிளாமர் காட்சிகளில் அதிகமாக நடிக்க உள்ளாராம் சமந்தா. அதனால் அவருக்கு வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட இருமடங்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதன் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இதன் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமந்தாவும் வருன் தவானும் கையில் துப்பாக்கியோடு இருக்கும் போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.