வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (20:07 IST)

கருப்பு வெள்ளையில் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம்: இணையத்தில் வைரல்

இந்த கொரோனா விடுமுறையில் நடிகைகள் பலர் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில் கொரோனா விடுமுறையை உருப்படியாக கழித்த ஒரே நடிகை சமந்தா மட்டும்தான் என்ற கருத்து நெட்டிசன்கள் இடையே நிலவி வருகிறது
 
மாடி தோட்டத்தில் காய்கறி விளைவிப்பது எப்படி? யோகா பயில்வது தியானம் செய்வது உடற்பயிற்சி செய்வது போன்ற உருப்படியான பணிகளை சமந்தா இந்த கொரோனா விடுமுறையின்போது செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அவ்வப்போது ஒருசில கவர்ச்சி புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். அந்த வகையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு வெள்ளையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது