வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (19:37 IST)

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை மிரட்டிய சல்மான் கான்

சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கும் காட்பாதர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துவரும் காட்பாதர் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் மலையாள லூசிபரில் முக்கிய வேடத்தில் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதையடுத்து இப்போது இயக்குனர் மோகன்ராஜா சல்மான் கான் மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். அதில் ’இரண்டு மெஹாஸ்டார்களை இயக்குகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலையாளத்தில் வெளியான லூசியர் படத்தில் அப்படத்தை இயக்கிய ப்ரித்விராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இ ந்  நிலையில் தெலுங்கில் உருவாகும் இதன் ரீமேக்கான காட்ஃபாதர் படத்தில்  பிரித்வி ராஜ் நடித்த ரோலில் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ள நிலையில் இதில் நடிக்க அவருக்கு இப்படத்தின் தயாரிப்பாளர் ராம்சரண் ரூ.20 கோடி சம்பளமாகக் கொடுக்க முன்வந்ததாகத் தெரிகிற்து.

ஆனால், பணம் கொடுத்தால் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என சல்மான் அன்பாக மிரட்டியுள்ளாராம். அதேபோல், எனது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நீங்கள் சம்பளம் கேட்பியர்களா என சல்மான் கேட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகிறது.