ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (10:39 IST)

இரண்டு மெஹா ஸ்டார்களை இயக்குகிறேன்… மோகன் ராஜா பகிர்ந்த காட்பாதர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கும் காட்பாதர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துவரும் காட்பாதர் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் மலையாள லூசிபரில் முக்கிய வேடத்தில் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சில தினங்களுக்கு அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவின. இதையடுத்து சிரஞ்சீவி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘சகோதரா, உங்கள் வருகை எங்கள் படக்குழுவினரின் ஆற்றலையும், எதிர்பார்ப்பையும் இன்னொரு தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. உங்களுடன் நடிப்பது உண்மையில் மகிழ்ச்சியான விஷயம். படத்தில் உங்கள் வருகைக் கண்டிப்பாக ஒரு மேஜிக்கை கொண்டுவரும்’ எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து இப்போது இயக்குனர் மோகன்ராஜா சல்மான் கான் மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ’இரண்டு மெஹாஸ்டார்களை இயக்குகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தைக் குவித்து வருகிறது.