1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:37 IST)

ஓடிடி தளங்களுக்கு சென்சார் வேண்டும்… சல்மான் கான் சொல்லும் காரணம்!

பாலிவுட்டின் மூத்த நடிகர்களில் ஒருவரான சல்மான் கான், இப்போது ‘கிஸி கா பாய் கிஸி கா ஜான்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து ஷாருக் கானோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ஓடிடி தளங்களுக்கு சென்சார் கொண்டுவர வேண்டும் என சல்மான் கான் கூறியுள்ளார். அவர்  பேச்சில் “இப்போது பதின் பருவத்தில் உள்ளவர்களுக்கும் எளிதாக செல்போன் கிடைக்கிறது. அதனால் ஓடிடிகளில் கெட்டவார்த்தை, நிர்வாணம் போன்ற காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.