பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 1050 கோடி ரூபாய் சம்பளமா? சல்மான் கான் கொடுத்த ஷாக்!
பிக்பாஸ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ இந்தியாவில் இப்போது கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலில் ஆரம்பித்தது இந்தி திரையுலகம்தான். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 15 சீசன்கள் அங்கு ஒளிபரப்பாகியுள்ளன. இந்த அனைத்து சீசன்களையும் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் பலமுறை அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்பியதாகவும், ஆனால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 16 ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் தனக்கு கடந்த முறை வாங்கியதை விட 3 மடங்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என சல்மான் கான் கேட்டுள்ளாராம். கடந்த சீசனுக்கு அவருக்கு 350 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்படியானால் இந்த முறை 1050 கோடி ரூபாய் அவர் சம்பளமாக கேட்பதாக சொல்லப்படுகிறது.