1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (21:48 IST)

என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது: சாய்பல்லவி விளக்கம்

saipallavi
சாய்பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தன்னுடைய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சாய்பல்லவி விளக்கமளித்துள்ளார்.
 
சாய்பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் அந்த நேர்காணலில் நீங்கள் வலதுசாரி ஆதரவாளரா அல்லது இடதுசாரி ஆதரவாளரா என்ற கேள்வி என்னிடம் கேட்கப் பட்டது என்றும் அதற்கு நான் நடுநிலையாளர் என்று கூறினேன் என்றார்.
 
முதலில் நாம் மனிதநேயம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் அதன் பிறகுதான் நமது அடையாளங்கள் எல்லாம் என்று கூறினேன் என்றும் தெரிவித்துள்ளார். எந்த வகையிலும் வன்முறை தவறுதான் என்று எந்த மதத்தின் பெயரில் அது நிகழ்ந்தாலும் அது குற்றம் என்றும் இது தான் நான் சொல்ல வந்த கருத்தின் சாரம்சம்  என்றும் ஆனால் சமூக வலைதளங்களில் சில கும்பல்கள் நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டனர் என்றும் அனைத்து உயிர்களும் சமமாகக் கருதப்பட வேண்டியது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்