செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (17:55 IST)

5 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரேமம் நாயகிகள் – ஹீரோ யார் தெரியுமா?

பிரேமம் படத்துக்குப் பிறகு மடோனா செபாஸ்டியனும் சாய் பல்லவியும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

 2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.

இதையடுத்து இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு சாய் பல்லவியும் மடோனா செபாஸ்டியனும் தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர். சியாம் சிங்கார ராய் என்ற படத்தில்தான் இவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.