ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (15:38 IST)

சச்சின் டெண்டுல்கரை கடவுள் என்று வர்ணித்த காஜல் அகர்வால்

கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை, ‘கடவுள்’ என்று வர்ணித்துள்ளார் காஜல் அகர்வால்.


 

 
விஜய்யின் ‘மெர்சல்’, அஜித்தின் ‘விவேகம்’ படங்களை முடித்துக் கொடுத்துவிட்ட காஜல், லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காணச் சென்றுள்ளார். அவரிடம், ‘சச்சின், லியாண்டர் பயஸ் இருவரில் யாரைப் பிடிக்கும்?’ என்று கேட்டபோது, “சச்சின் டெண்டுல்கர். ஏனென்றால், அவர் கடவுள்” எனப் பதில் அளித்துள்ளார்.  அத்துடன், “இந்தியாவில் விளையாடப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட் தான் என்னுடைய ஃபேவரைட். ஆனால், டென்னிஸ் விளையாடுவதைப் பார்க்க ரொம்ப பிடிக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

‘ஸ்போர்ட்ஸ் அல்லது ரொமான்ட்டிக் காமெடிப் படங்கள், இந்த இரண்டில் எது உங்களுக்குப் பிடித்தமானது?’ என்ற கேள்விக்கு, “ஸ்போர்ட்ஸ் படங்களைப் பார்க்க பிடிக்கும். ஆனால், ரொமான்ட்டிக் காமெடிப் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.