செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (13:33 IST)

இயக்குனர் அறிவழகனின் அடுத்த படம்.. டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

arivazhagan
இயக்குனர் அறிவழகனின் அடுத்த படம்.. டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
தமிழ் திரை உலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
ஈரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். அதன்பின் அவர் வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கினார் என்பதும் அவர் இயக்கி முடித்துள்ள பார்டர் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சப்தம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva