சர்ச்சையை ஏற்படுத்திய சந்தானம் படத்தின் போஸ்டர்!
சந்தானம் நடித்த சபாபதி திரைப்படம் வரும் 19-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சந்தானம் நடிப்பில் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் சபாபதி. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஹாலிவுட் படமான ரோல் மாடல்ஸ் எனும் படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்த வெளியிடப்பட்ட போஸ்டர் ஒன்று இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்' என்ற வாசகம் அடங்கிய சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. இது காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழர்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, அந்த போஸ்டரை நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளனர்.