ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 3 ஏப்ரல் 2021 (17:51 IST)

ரூ.400 கோடி பட்ஜெட்…..கமல் படத்தை வெளியிடும் தனுஷ் பட தயாரிப்பாளர் !

கடந்த 2001 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் ஆளவந்தான். இப்படத்தைத் தயாரித்தவர் கலைப்புலி எஸ். தாணு.

இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ரவீணா டாண்டன், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.பெர்தும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார் தாணு.

அப்போது அவர்  கூறியதாவது:

இக்கதை என்னிடம் சொன்னது ஒன்று; படமாக ரிலீசானது வேறு. எனவே இப்படத்தின் கதையை நானே எடிட் செய்து வெளியிடவுள்ளேன். 20 வருடங்களுக்கு பின்னர் வரக்கூடிய கதையை கமல் முன்பே எடுத்துவிட்டர். இது பரிசோதனை முயற்சி என்றாலும் அவர் என்னை எடுக்க வைத்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இப்படம் அன்றைய பட்ஜெட்டை இன்றைய தேதியில் ஒப்பிடும்போது சுமார் ரூ.400 செலவானதாகக் கூறியுள்ளார் தயாரிப்பாளர்.  இதனால் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.