ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 மே 2021 (11:44 IST)

ஒன்னும் பெருசா இல்லையே… ஆர் ஆர் ஆர் பட போஸ்டரைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

நடிகர்கள் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என் டி ஆர் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்‌ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி. இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் என் டி ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த போஸ்டர் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. ஆரம்பத்தில் இருந்தே ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரோமோஷன்கள் ஒன்று கூட ரசிகர்களிடம்  ஆரவாரமான வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.