லோகேஷ் கனகராஜ்- -விஜய் படத்தில் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோ
விஜய்யின் 67 வது படத்தை லோகேசஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில் மாஸ்டர் கூட்டணி இணையப் போவதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல், நடிப்பில் வெளியான படம் விக்ரம். இது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் விஜய்- லோகேஷ் மீண்டும் இணையவுள்ள படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த ராம்சரணை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது. இது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நேரடி தெலுங்கு படத்தில் விஜய்66 படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் தெலுங்கு முன்னணி நடிகருடன் இணைந்து விஜய் நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.